"முட்டாள் தனமாக ரஷியா குண்டுகளை வீசி வருகிறது" - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு

#world_news #Ukraine #Russia
"முட்டாள் தனமாக ரஷியா குண்டுகளை வீசி வருகிறது" - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு

கிழக்கு உக்ரைனில் போர் தீவிரமாகிற நிலையில், டான்பாஸ் பிராந்தியத்தில் இருந்து 17 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாக ரஷியா கூறி உள்ளது. கிழக்கு உக்ரைனில் ரஷிய படையினரின் தாக்குதல் வலுத்து வருகிறது. இதையடுத்து அங்கு டான்பாஸ் பிராந்தியத்தின் டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க் ஆகியவற்றின் அபாயகரமான பகுதிகளில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அவர்களில் 2,004 பேர் குழந்தைகள் ஆவார்கள். இந்த நிலையில், டான்பாஸ் பிராந்தியம் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கவலை தெரிவித்துள்ளார். டான்பாஸில், ரஷ்ய ஆக்கிரமிப்பாளர்கள் இன்னும் அழுத்தம் கொடுக்க முயற்சிப்பதாக கூறிய அவர், முடிந்தவரை உக்ரைனியர்களைக் கொல்ல வேண்டுமென்ற நோக்கத்துடன் நடத்தப்படும் இனப்படுகொலை இது என குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!